தூத்துக்குடியில் ஸ்பிக் இந்து ஏழை மாணவர் கல்வி வளர்ச்சிக் கழகம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள், முன்னாள் பணியாளர்கள், மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் பங்களிப்பு மூலமாக கடந்த செயல்பட்டு வரும் அமைப்பு இந்து ஏழை மாணவர் கல்வி வளர்ச்சிக் கழகம் தேசிய சிந்தனையுடன் சமுதாய சேவைப் பணிகளில் ஈடுபடும் சிலரால் சிறிய அளவில் துவக்கப் பட்டு1984 இல் பதிவு செய்யப்பட்ட HPSEWA கடந்த 39 ஆண்டுகளாக கல்வி சேவையில் ஈடுபட்டு வருகிறது.
இந்த ஆண்டு கல்வி உதவித் தொகை & நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா தூத்துக்குடி அழகர் மஹாலில் நடந்தது. அழகர் குழுமத்தின் தலைவர் விஎஸ்ஏ ஜெயராமன் தலைமை தாங்கினார். ஸ்பிக் நிறுவன முழு நேர இயக்குநர் பாலு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். காமாட்சி வித்யாலயா செயலாளர் அருணாச்சலம் வாழ்த்துரை வழங்கினார்.
இவ்விழாவில், சுமார் 1 லட்ச ரூபாய் அளவிலான உதவித் தொகையும், ரூ.40,000 மதிப்பிலான நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட்டன. இவ்விழா ஏற்பாடுகளை HPSEWA நிறுவனர் ராஜேந்திரன், தலைவர் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் சுந்தரேசன், செயலாளர் ராஜ்குமார், இணைச் செயலாளர் மீனாட்சி சுந்தரம், பொருளாளர் சாத்தப்பன், மற்றும் ராஜாகாந்தி, கண்ணன், மகாராஜன்,கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர்.


