தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி அவர்களின் வழி நடத்துதலின்படி, உதவி திட்ட அலுவலர்கள் முனியசாமி, ஜெயக்குமார் அவர்களின் ஆலோசனையின் படியும் ,பள்ளி செல்லா குழந்தைகளின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் ஆலோசனைப்படியும் 11.8.23 அன்று கருங்குளம் வட்டார வள மையத்தில் வட்டார கல்வி அலுவலர்கள் முத்துக்குமார், மரிய ஜெயசீலா ஆகியோரின் தலைமையில் அனைத்து தலைமை ஆசிரியரின் கூட்டம் நடத்தப் பெற்றது. பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு ,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுடன் இணைந்து செய்வது பற்றியும் ,பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கான செயலி பற்றிய விளக்கமும், தொடர்ந்து விடுப்பு எடுக்கும் மாணவர்கள் விவரங்களை எமிஸ் வெப்சைட்டில் எவ்வாறு அப்டேட் செய்வது என்பது பற்றியும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் அவர்கள் விளக்கமாக தலைமையாசிரியர்களுக்கான கூட்டத்தில் தெளிவாக எடுத்துக் கூறினார்கள். இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை கருங்குளம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெய மேரி அற்புதம் தலைமையில்,பள்ளி செல்லா குழந்தைகளின் வட்டார ஒருங்கிணைப்பாளர் மகாராணி, ஆசிரியர் பயிற்றுநர்கள் ராஜேந்திரன், சிவசங்கரி , பீபேகம்,வெயில் முத்து ஆகியோர் செய்து இருந்தனர்.


