சென்னையில் ஆசியன் சம்பியன்ஷிப் தொடரில், இந்தியா – ஜப்பான் ஹாக்கி போட்டியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
சென்னை எழும்புர் இராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் ஆசியன் சம்பியன்ஷிப் ட்ராபி ஹாக்கி போட்டியில் இந்தியா ஜப்பான் அணிகளுக்கிடையேயான போட்டியை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் டய்யாய் இக்ராம், ஹாக்கி இந்தியா தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் திலிப் டர்க்கி, ஹாக்கி இந்தியா பொதுச்செயலாளரும் ஆசிய ஹாக்கி கூட்டமைப்பின் துணைத்தலைவருமான போலாநாத்சிங், மேஜர் தியான்சந்த் கேல்ரத்னா விருதுவென்ற சரத்கமல், ஹாக்கி இந்தியா நிர்வாக இயக்குநர் ஸ்ரீவத்சவ் மற்றும் அரசு அதிகாரிகள் விளையாட்டு வீரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


