நாசரேத், திருமறையூர் சேகரம் மறுரூப ஆலய பிரதிஷ்டை பண்டிகை விழா கடந்த 4ம் தேதி துவங்கி 8ம்தேதி வரை 5 நாட்கள் நடைபெற்றது .
முதல் இரண்டு நாட்கள் நடைபெற்ற கன்வென்ஷன் கூட்டங்களில் தூத்துக் குடியை சார்ந்த சகோ.செல்வக்குமார் தேவசெய்தி கொடுத்தார்.திருமறையூர் பிரைட் ஆர்கெஸ்ட்ரா குழுவினர் சிறப்பு பாடல்களை பாடினர்.3-வது நாள் காலை 9 மணிக்கு பரி.திருவிருந்து ஆராதனையும், அத னைத் தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு பண்டிகை ஆராதனையும் மூக்குப்பீறி சேகரகுரு ஞானசிங் எட்வின் தலைமை யில் நடைபெற்றது.
4-வது நாள் அதிகாலை 5 மணிக்கு அசனப்பண்டிகை ஆராதனையும் பரி. திருவிருந்து ஆராதனையும் சேகர குரு ஜாண் சாமுவேல் தலைமையில் நடந் தது.மாலை 4:30 மணிக்கு அசன விழா நடைபெற்றது.நிறைவுநாளன்று மாலை 7 மணிக்கு ஸ்தாபனங்களின் கலைநிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை சேகர குரு ஜாண் சாமுவேல், சபை ஊழியர் ஸ்டான்லி ஜாண்சன் துரை,ஆலய பணியாளர் ஆபிரகாம், அசன கமிட்டி உறுப்பினர் கள்,சபை மக்கள் செய்திருந்தனர்.


