தூத்துக்குடி சண்முகபுரம் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் 351 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவிலுக்குட்பட்ட பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் சிவனனைந்த பெருமாள் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு 351 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கொடை விழாவை யொட்டி கடந்த வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் கால்நட்டு விழா நடைபெற்றது.
நேற்று (செவ்வாய்கிழமை) இரவு மழை வளம், தொழில்வளம் பெருக வேண்டியும், அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை அமைய வேண்டி திருவிளக்கு பூஜை மற்றும் சுவாமிகளுக்கு கும்பம் ஏற்றும் பூஜையும் நடைபெற்றது. இதில், கோவில் நிர்வாக கமிட்டியாளர்கள் வாரவழிபாடு மாதர் சங்கத்தினர் கோவில் கைங்கர்ய பக்தர்கள் சண்முகபுரம் இளைஞர் முன்னேற்ற அணியினர் பக்தர்கள் கலந்து கொண்டனர்.


