பாஜக தலைவர் அண்ணாமலையின் எழுச்சி நடைபயனம் வருகிற 13ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட துனை தலைவர் சிவராமன் வெளியிட்ட அறிக்கையில், “பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் எழுச்சி நடை பயணமான “என் மண் என் மக்கள்” நிகழ்ச்சி தூத்துக்குடி சட்டமன்றத்தில் வருகிற 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் காய்கறி மார்க்கெட் அருகில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கி சிவன் கோயில் ரதவீதிகள் வழியாக சென்று அந்தோணியார் கோயில் வழியாக சண்முகபுரம் சந்தி விநாயகர் கோயிலில் முடிவடைகிறது.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத்தில் மாலை 4 மணி அளவில் ஆழ்வார் திருநகரியில் இருந்து தொடங்கி வஉ சிதம்பரனார் பிள்ளை மனைவி மீனாட்சி அம்மாள் பிறந்து வளர்ந்த ஊரான சித்திரை வீதி வழியாக ஸ்ரீவைகுண்டம் தேவர் சிலை முன்பு முடிவடைகிறது.


