தூத்துக்குடி மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்று வரும் ஸ்ரீவைகுண்டம் குறுவட்ட அளவிலான போட்டிகள் வல்லநாடு சாரா மெட்ரிகுலேஷன் பள்ளியில் வைத்து நடந்து வருகிறது.
இதில் செக்காரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் வளையபந்து பிரிவில் 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்தனர். கூடைபந்தாட்டம் பிரிவில் 14 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மற்றும் 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடித்தனர். பூப்பந்தாட்டம் பிரிவில் 14 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் இரண்டாம் இடம் பிடித்தனர்.
மேலும் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் மூன்று மாணவர்கள் வெற்றி பெற்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்துக்குமார், உதவி தலைமை ஆசிரியர் பொன்முத்து நம்பிராஜன், உடற்கல்வி ஆசிரியர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஆசிரியர்களும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்தவர்கள், ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டினார்.


