தூத்துக்குடியில் கருணாநிதி நினைவு நாளையொட்டி அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
தூத்துக்குடி திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் தமிழ்நாடு முதல்வருமான கருணாநிதி 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
புதிய பேருந்து நிலையம் முன்பிருந்து ஊர்வலம் புறப்பட்டு கலைஞர் அரங்கம் வரை நடைபெற்றது. பின்னர் அங்கு கருணாநிதி சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஜிவி மார்க்கண்டேயன் எம்எல்ஏ, மாநகர் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஜீவன் ஜேக்கப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



