விளாத்திகுளத்தில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமினை மார்கண்டேயன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி மற்றும் ஸ்காட் நிர்மான் கிராம மேம்பாட்டு திட்டம், சாரோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமினை மார்கண்டேயன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
நிகழ்வில் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இம்மானுவேல், சமூக ஆர்வலர் இளையராஜா மாரியப்பன், வார்டு செயலாளர் ஸ்டாலின்கென்னடி, மாரிராஜ், திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், சமூகவலைதள ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


