தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.11.59 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர், தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஊரக பகுதிகளில் உள்ள மக்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஊரக வளர்ச்சித் துறை மூலம் பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்த அறிவுறுத்தியுள்ளார்கள். அதனடிப்படையில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அய்யனடைப்பு ஊராட்சி சோரீஸ்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.27.80 இலட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கட்டுமான பணிகள், மறவன்மடம் ஊராட்சி திரவியபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.8 இலட்சம் மதிப்பில் குளம் தூர்வாரும் பணி, ராமச்சந்திரபுரத்தில் ரூ.8 இலட்சம் மதிப்பில் வரத்து கால்வாய் தூர்வாரும் பணிகள் மற்றும் ரூ.17.50 இலட்சம் மதிப்பில் நல்லமலை சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.
மேலும், கீழத்தட்டப்பாறை கிராமத்தில் ரூ.27.15 இலட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுமான பணிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.27.70 இலட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கட்டுமான பணிகள், மேலத்தட்டப்பாறை கிராமத்தில் நபார்டு திட்டத்தின்கீழ் பேரூரணி – மேலத்தட்டப்பாறை சாலையில் ரூ.284.50 இலட்சம் மதிப்பில் பாலம் கட்டுமான பணிகள், உமரிக்கோட்டை ஊராட்சி உமரிக்கோட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.27.85 இலட்சம் மதிப்பில் 2 வகுப்பறை கட்டுமான பணிகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.7.43 இலட்சம் மதிப்பில் சமையலறை கட்டும் பணிகள் மற்றும் ரூ.153 இலட்சம் மதிப்பில் வரதராஜபுரம் – சண்முகபுரம் சாலை பராமரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.
ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குலசேகரநல்லூர் ஊராட்சி குலசேகரநல்லூர் கிராமத்தில் ரூ.33.80 இலட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் கட்டும் பணிகள், முறம்பன் ஊராட்சிக்குட்பட்ட முறம்பன் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.46.20 இலட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுமான பணிகள், பரிவல்லிக்கோட்டை ஊராட்சியில் ரூ.57.05 இலட்சம் மதிப்பில் ஓட்டப்பிடாரம் – கல்லத்தி கிணறு சாலை அமைக்கும் பணிகள், கல்லத்திகிணறு ஊராட்சியில் ரூ.269.12 இலட்சம் மதிப்பில் ஒட்டநத்தம் – கல்லத்திகிணறு சாலையில் பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.
மேலும், மணியாச்சி ஊராட்சி சொக்கநாதபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.7.43 இலட்சம் மதிப்பில் சமையலறை கட்டுமான பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தேன். அனைத்து வளர்ச்சி திட்டப் பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் ஒட்டநத்தம் ஊராட்சியில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் தொகை திட்டத்தில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டார். ஆய்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சிவராணி, உதவி செயற்பொறியாளர் அமலா, வட்டாட்சியர்கள் பிரபாகரன் (தூத்துக்குடி), சுரேஷ் (ஓட்டப்பிடாரம்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தூத்துக்குடி ஹெலன் பொன்மணி, வசந்தா, ஓட்டப்பிடாரம் சிவபாலன், ராமராஜன் மற்றும் பொறியாளர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


