தூத்துக்குடி மாநகராட்சியில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சியில் சிறு வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்குவது குறித்த பிரதமர் ஸ்வநிதி திட்டம் தொடர்பாகவும் தூத்துக்குடி மாநகராட்சியின் பல்வேறு திட்டப்பணிகள் தொடர்பாகவும் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து ஆய்வு கூட்டம் ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர், தினேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அதில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் புதிய தார்சாலை பேவர்பிளாக் சாலை கால்வாய் மின்விளக்கு உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு பணிகள் முழுமையாக நிறைவேற்றுவது. மழைகாலத்திற்கு முன்பு முழுமையான கட்டமைப்பு பணிகளை முடிக்க வேண்டும். எந்த பகுதியிலும் மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுப்பது. சாலையோரம் சிறு வணிகர்கள் வியாபாரம் செய்வதற்கு 1500 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு அவர்களுக்குரிய அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சாலையோர கடைகள் அமைப்பதற்கு பலர் கோரிக்கை வைத்துள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் கூடுதலாக வியாபாரிகள் நலன் கருதி கடைகள் வைப்பதற்கு அனுமதி வழங்குவது சிறு தொழில் வணிகர்களுக்கு தொழல்கடனாக 10 ஆயிரம் முதல் வழங்கப்பட்டு அவர்களுக்குரிய வங்கியில் முறையாக செலுத்துபவர்களுக்கு 50 ஆயிரம் வரை வழங்குவதற்கான வழிவகை செய்யப்படுகிறது. மாநகராட்சி பகுதியை மாசு இல்லாத நிலையை உருவாக்கி பசுமையை ஏற்படுத்தி மக்கள் நலனை பாதுகாக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.
ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை அலுவலர் வீரபுத்திரன், மாநகராட்சி பொறியாளர் பாஸ்கர், உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், உதவி ஆணையர் சேகர், ஸ்மார்சிட்டி திட்டம் ரெங்கநாதன், மாநகராட்சி நகர்நல அலுவலர் சுமதி, ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், அரசுத்துறை அதிகாரிகள் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


