தாய்ப்பால் பிறந்த குழந்தைக்கு ஒரு முழுமையான ஊட்ட உணவு. உலக தாய்ப்பால் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
பத்து மாதங்கள் தாயின் கருவறையில் இருந்து வெளிவரும் குழந்தை, முதலில் சுவைப்பது அன்னையின் தாய்ப்பால். இது தான் குழந்தையின் முதல் உணவு. குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும், புரதமும் அடங்கியுள்ளது.
அனைத்து விதமான சத்துகளும் சரியானவிகிதத்தில் இயற்கையாகவே அமைந்துள்ளது. தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை தாய்மார்களுக்கு உணர்த்தும் விதமாக உலக தாய்ப்பால் வாரம் ஆக. 1ஆம் தேதியில் இருந்து 7ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.
உலகில் கலப்படமில்லாத கலப்படம் இல்லாதது தாய்ப்பாலும் தாய்ப்பாசமும் தான். தாய்ப்பால் குழந்தைக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாகும். தாய்ப்பால் குழந்தையின் புத்திக்கூர்மையை மேலும் உயர்த்துகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் நல்ல பாசப்பிணைப்பு ஏற்படுகிறது. மேலும் தாய்ப்பாலில் குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
தாய்ப்பால் பிறந்த குழந்தைக்கு ஒரு முழுமையான ஊட்ட உணவு. நோயுற்ற குழந்தைக்கு தாய்ப்பாலும், தாயின் அரவணைப்பும் இதமளிக்கின்றன. குழந்தையின் மன வளர்ச்சிக்கு அது உதவுகிறது. தாய்ப்பாலூட்டுவது தாய்க்கும் பல நண்மைகளை அளிக்கும். குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள் தாய்ப்பாலூட்ட ஆரம்பிப்பதால், கருப்பை விரைவில் சுருங்கி உதிரப்போக்கு குறையும்


