மரபு கலையான மல்லர் கம்பத்தின் ஆய்வு நூலானது உலக வரலாற்றில் முதல் முறையாக மலர் கம்பம் என்ற பெயரில் தயாராகி உள்ளது. இந்த நூலை முனைவர் க. கணேஷ் தமிழில் எழுதியுள்ளார். புதுச்சேரி கலை மற்றும் கைவினை கிராமத்தில் இந்த நூல் வெளியிடப்பட்டது. மயிலம் பொம்மபுர ஆதினம் சிவஞானபாலயா சுவாமி வெளியிட்டார். வனஜா கதிர்வேல் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
பொம்மபுர ஆதினம் பேசியவோது இன்னைய மாணவர்கள் பெரும்பாலுமே கைபேசியிலே மூழ்கி கிடக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் உடற்பயிற்சியான மல்லர்கம்பம் கற்று, அந்த விளையாட்டை விளையாடுவது மூலம் உடலையும் உள்ளத்தையும் நலமாக வைத்து கொள்ளலாம் என பேசினார். உருளையான் பேட்டை நகராட்சி ஆணையாளர் சுரேஷ் ராஜ் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் முதலியார் பேட்டை சட்ட மன்ற உறுப்பினர் எல். சம்பத் உள்பட பலர் பேசினர். முன்னதாக வசந்தி கணேஷ் அனைவரையும் வரவேற்றார். கலைமாமணி ஆசான் உலக துரை அலைபேசி வழியாக வாழ்த்துரை வழங்கினார். புதுச்சேரி மண்டலத்தின் இந்திரா காந்தி தேசிய கலை மைய மண்டல இயக்குனர் கலைமாமணி முனைவர் ஜெ. கோபால் நூலை மதிப்புரைசெய்தார்.
அழகப்பா பல்கலைக்கழகத்ன் உடற்கல்வி மற்றும் உடல நலத்துறை தலைவர் முனைவர் உஷாராணி, புதுச்சேரி படைப்பாளர இயக்கத்தின் தலைவர் கலைமாமணி ஆறுசெல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மல்லர் கம்பம் கழகத்தின் தலைவர் துரை ஜானகி ராமன், கராத்தே சுந்தர்ராஜன், சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் மற்றும் மனநல ஆலோசகர் நிர்மலா டெய்சி, தமிழ்நாடு மல்லர் கம்பம் கழக நிர்வாகிகள் ஜம்னாஸ்டிக் கழக நிர்வாகிகள் , புதுவை தமிழ் சங்க நிர்வாகிகள், கலைக்குழு கூட்டமைப்பு, சிலம்ப ஆசான்கள் , பெற்றோர்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


