ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க பாடுபட்டு வருகின்றமைக்காக ஒரு லட்ச ரூபாய் பரிசு தொகையுடன் கிரீன் சாம்பியன் விருது பெற்ற டாக்டர் எஸ் ஜே கென்னடி அவர்கள் பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான டாக்டர் தொல் திருமாவளவன் அவர்களிடம் வாழ்த்து பெற்றார்.
தமிழர்களின் தேசிய மரமான பனை மரத்தை போற்றி பாதுகாக்க, அழிந்து வரும் பனையை அதிக அளவு வளர்க்க வேண்டும் என்பதற்காக மதர் சமூக சேவை நிறுவனத்தின் நிறுவனரும், இயக்குனருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி அவர்கள் ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க சமூக அக்கறையோடு, சேவை மனப்பான்மையோடு, எந்த நிதி உதவியும் பெறாமல் தொடர்ந்து கடந்த 2018 ஆண்டு முதல் பனை மர விதைகளை விதைத்து வருகிறார்கள். மேலும் மரக்கன்றுகள் நடுதல், மரக்கன்றுகள் வழங்குதல், விதைப்பந்து விதைத்தல், மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க, பனையின் வளர்ச்சியை மேம்படுத்த விழிப்புணர்வு முகாம் , கருத்தரங்கு, மாநாடுளை நடத்தி சுற்றுச்சூழல், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்து வருகிறார். மேலும் மேலும் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 முதல் 15 தேதி வரை “தூய்மை இந்தியா” இரு வார கால அனுசரிப்பை முன்னிட்டு பள்ளி, கல்லூரி, வளாகங்களிலும், அரசு அலுவலகத்திலும், ஊராட்சி மன்றகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், சாலை ஓரங்களிலும் மரக்கன்றுகளை நடுவதோடு, பராமரிப்பை கவனித்து வருகிறார்கள். மேற்கண்ட மதர் சமூக சேவை நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி அவர்களின் சேவையை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் விதமாக மதர் சமூக சேவை நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை சார்பில் “தமிழ்நாடு கிரீன் சாம்பியன் விருதும் & ஒரு லட்ச ரூபாய் பரிசு தொகையும் தூத்துகுடி மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி. செந்தில்ராஜ் IAS அவர்கள் தலைமையில் மாண்புமிகு அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி அவர்களிடம் வழங்கினார்கள்.
கிரீன் சாம்பியன் விருது மற்றும் ஒரு லட்சம் பரிசு தொகையைப் பெற்ற டாக்டர் எஸ் ஜே கென்னடி அவர்கள் பனை விதை போடுவதற்கு தனக்கு முன்னோடியாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான. டாக்டர் தொல் திருமாவளவன் அவர்களை நேரில் சந்தித்து விருது பெற்றதை தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள் விருது பெற்ற மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி அவர்களை ஆரத்தழுவி சால்வை அணிவித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்த்தி பாராட்டினார். மேலும் இந்த சேவையை தொடர்ந்து சிறப்பாக செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


