நாகா்கோவில்-தாம்பரம் விரைவு ரயில் என்ஜினில் திடீா் பழுது ஏற்பட்டதால் கோவில்பட்டி ரயில் நிலையத்திலிருந்து 45 நிமிடம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.
நாகா்கோவில்- தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில், நாகா்கோவிலில் இருந்து கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு நேற்று மாலை 6.25 மணிக்கு வந்தடைந்தது. சில நிமிடங்களில் புறப்பட்டபோது, ரயில் என்ஜினில் பழுது ஏற்பட்டதாம். இதையடுத்து, தொழில்நுட்ப ஊழியா்களின் உதவியுடன் என்ஜினில் ஏற்பட்ட பழுது நீக்கப்பட்டதையடுத்து இரவு 7.10 மணிக்கு கோவில்பட்டி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது.


