தூத்துக்குடி யூனியன் அலுவலகத்தில் 10,000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பத்தாயிரம் மரக்கன்றுகள் நடும் துவக்க விழா தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்டமைப்பு) சார்பில் மாநில தலைவர், கிரீன் கமிட்டி உறுப்பினர் தாமோதரன் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர் கு.வசந்தா முன்னிலையில் நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய ஆணையர் மோ.ஹெலன் மரக்கன்று நடவுப் பணியை துவக்கி வைத்தார். இவ்விழாவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சந்திரகலா, வேளாண்மை அலுவலர்கள் ரோகித் ராஜ், ஆனந்தன், பொறியாளர் தளவாய், கூட்டுடன்காடு ஊராட்சி மன்றத் தலைவர் மாங்கனி அரிபாலகிருஷணன் ஊராட்சி வார்டு உறுப்பினர் இந்திராகாந்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


