தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் 201 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் கொடை விழா நேற்று காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பின்னர் கால்நட்டு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மாலையில், மழை வளம், நாட்டின் ஓற்றுமை, மனித நேயம், அமைதி, தொழில்வளம், பெருகவேண்டி மகளிர் அணி சார்பில் 201 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


