தூத்துக்குடி பனியமய மாதா கோவில் திருவிழாவிற்கு மக்கள் தங்களது வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூராக சாலையோரங்களில் ஆங்காங்கே நிறுத்த வேண்டாம் என எஸ்பி பாலாஜி சரவணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தூத்துக்குடி பனிமய மாதா கோவில் 16வது தங்கத்தேர் திருவிழா 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வரும் 05.08.2023 வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மக்கள் கூட்டம் அதிகமாக வரும் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் நாட்களான 29.07.2023, 30.07.2023, 03.08.2023, 04.08.2023 மற்றும் 05.08.2023 ஆகிய நாட்களில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக 10 இடங்களில் வாகன நிறுத்தும் (Parking) வசதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
அதன்படி 1. வ.உ.சி சாலை வழியாக வரும் வாகனங்கள் தூத்துக்குடி வ.உ.சி (WGC ரோடு) சாலை வழியாக மாதா கோவில் வரும் வாகனங்கள் பழைய முனிசிபல் ஆபீஸ் ஜங்ஷன், வடக்கு காட்டன் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு வழியாக சென்று புனித பிரான்ஸிஸ் சேவியர் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, பிரெஞ்சு சேப்பல் தெரு வழியாக சென்று சின்னக்கோவில் வளாகத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்தவும் மேலும்,


