கிளாக்குளம் வெங்கடேச பெருமாள் தேவஸ்தானம் – ஆவணி திருவிழா வருகிற 12.08.2023 (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
12.08.2023 முதல் 16.08.2023 வரை ஐந்து நாட்களும் சிறப்பு பூஜை நடைபெறும். 17.08.2023 – 6ஆம் நாள் திருவிழா (வியாழன்) மாலை 7 மணிக்கு மாகாப்பு பூஜை நடைபெறும்.
18.08.2023 – 7 ஆம் நாள் திருவிழா (வெள்ளிக்கிழமை) மாலை 7 மணிக்கு சந்தன காப்பு பூஜை நடைபெறும். 19.08.2023 – 8ஆம் நாள் (சனிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு மேல் சிறப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெறும். இரவு 8 மணிக்கு அலங்கார பூஜை நடைபெறும். அதைத்தொடர்ந்து இரவு 9:00 மணிக்கு வில்லிசை” நடைபெறும்.
20.08.2023 விழாவின் முக்கிய நாளான 9 ஆம் நாள் ( ஞாயிற்றுக்கிழமை) திருவிழாவில், நையாண்டி மேளத்துடன் காலை 9 மணிக்கு பால்குடம் நேர்ச்சைகள், தாமிரபரணி நதி தீர்த்து அபிஷேகத்துடன் சுவாமி திருவீதி உலா வருதல். மேலும் காலை 10 மணி முதல் வில்லிசை நடைபெறும். மதியம் ஒரு மணிக்கு உச்சி கால சிறப்பு பூஜை நடைபெறும். இரவு ஏழு மணி அளவில் சுவாமிக்கு சிறப்பு பூஜையுடன் மகளிர் வழிபாடுகள் நடைபெறும், அதைத்தொடர்ந்து இரவு 9 மணி வரை இன்னிசை கச்சேரி – வில்லிசை நடைபெறும். இரவு 1 மணி அளவில் வெங்கடேச பெருமாளுக்கு புஷ்ப அலங்காரம் அபிஷேக அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெறும்.
21.08.2023 – 10 ஆம் நாள் திருவிழா (திங்கள் கிழமை) இரவு வில்லிசை மற்றும் அபிஷேக அலங்கார பூஜையுடன் திருவிழா நடைபெறும்.


