செய்துங்கநல்லூர் சுந்தரபாண்டிய சாஸ்தா கோவில் மற்றும் பரிவார தேவதைகளின் ஆறாம் ஆண்டு ஆடிப்பெருக்கு சிறப்பு கொடை விழா நடைபெற உள்ளது
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம்,செய்துங்கநல்லூர், சுந்தரபாண்டிய சாஸ்தா மற்றும் பரிவார தெய்வங்களுக்கு திருக்கோவிலில் வருகிற 03.08.2023 (வியாழக்கிழமை) ஆறாம் ஆண்டு ஆடிப்பெருக்கு கொடை விழா, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம்,சுதர்சன ஹோமம், ருத்ரம் சாஸ்தா, சமூகம் கும்ப பூர்ணாஹுதி நடைபெற உள்ளது.
02.08.2023 (புதன்கிழமை) இரவு 7 மணி முதல் 9 மணி வரை மாகாப்பு தீபாராதனை.
03.08.2023 ( வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியும், மதியம் 1 மணிக்கு, அபிஷேக தீபாரதனை நடைபெறும், மாலை 6 மணி முதல் 7.30 மணி அளவில் திருவிளக்கு பூஜை சுமங்கலி பூஜை நடைபெறும், இரவு 9 மணி முதல் 10 மணியளவில் சுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடைபெறும், இரவு 10 மணி முதல் 10.30 மணியளவில் மரம் செப்பு தேர் வீதி உலா நடைபெறும். இறுதியாக இரவு 11 மணி முதல் 12 மணியளவில் சாமக் கொடை தீபாராதனை நடைபெறும்.
கொடை விழாவில் அன்னதானம் வழங்கப்படும். இதற்கான மும்பை அன்னதான அறக்கட்டளை சார்பில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


