தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலுகா கருங்குளம் ஒன்றியம் கிளா குளத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கிளை அமைக்கப்பட்டது தலைவர் ராதாகிருஷ்ணன் செயலாளர் பார்வதி பொருளாளர் அன்பு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் இந்த கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் தோழர் கண்ணன் ஒன்றிய குழு உறுப்பினர் சுந்தர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன நெல்லை சந்திப்பில் இருந்து கிளாக் குளத்திற்கு இயங்கிக் கொண்டிருந்த தமிழ்நாடு அரசு நகர பேருந்து காலை மாலை ஆகிய இரண்டு நேரங்களில் வந்து சென்று கொண்டிருந்த நகர பேருந்து கடந்த இரண்டு வருடங்களாக வருவதே இல்லை பேருந்து வராததால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் பள்ளி கல்லூரி செல்லக்கூடிய மாணவ மாணவியர்கள் செல்வதற்கு இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்தே செல்லும் சூழலை ஏற்படுகிறது குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் மருத்துவமனை வங்கி தாலுகா அலுவலகம் யூனியன் அலுவலகம் செல்ல முடியாமல் பரிதவித்து கொண்டு இருக்கின்றனர் உடனடியாக நிறுத்தப்பட்டரூட்நம்பர் 3J அரசு நகர பேருந்தை உடனடியாக இயக்க வேண்டும்
2. கிளாக் குளம் கிராமத்திற்கு குடிதண்ணீர் முறையாக வருவதில்லை இதனால் அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று தண்ணீர் எடுக்கும் நிலைமை ஏற்படுகிறது கிளாக் குளம் கிராமத்திற்கு தினசரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
3. தாதன்குளத்தில் இருந்து கிளாக்குளம் செல்லும் வழியில் ரயில்வே தண்டவாளத்தை அடுத்து கிளாக்குளம் வரை சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கட்ட நிலையில் உள்ளது தரமான சாலை அமைக்க வேண்டும்
4. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூலியை தொய்வில்லாமல் முழுவதையும் உடனடியாக வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன


