தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவி கலைச்செல்வி திலகராஜ் கலந்து கொண்டு, மாணவ- மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கி சிறப்புரை ஆற்றினார். விழாவில் திலகராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, பாலசுந்தர கணபதி, மரகதவள்ளி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.


