தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையக கிளையில் வங்கி கணக்கில்லாத மூதாட்டிகளுக்கு ஆரம்பத் தொகை இல்லாத சேமிப்பு கணக்கு துவங்கி பாஸ்புக் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கி கணக்கு இல்லாத குடும்ப தலைவிகளுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் ஆரம்பத் தொகை இல்லாமல் சேமிப்பு கணக்கு துவங்கிட மண்டல கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சிவ.முத்துக்குமாரசாமி மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர்/ செயலாட்சியர் சிவகாமி அறிவுறுத்தலின் பேரில் இலவச சேமிப்பு கணக்கு துவங்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதில், வங்கி கணக்கு இல்லாத குடும்ப தலைவிகள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் தங்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளை அணுகி ஆரம்பத்தொகை இல்லாத சேமிப்பு கணக்கு துவங்கி பயன்பெறுமாறு வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.


