தூத்துக்குடியில் திமுக தொண்டர் அணி நிர்வாகிகள் அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தூத்துக்குடி திராவிட முன்னேற்ற கழகத்தின் 15-வது கழக தேர்தல் நடைபெற்று கிளை செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதன்பின் திமுகவின் கட்டமைப்பு படி 23 அணிகள் செயல்படுகின்றன. அதற்கும், மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதனையடுத்து தூத்துக்குடி மாநகர திமுக மாவட்ட தொண்டர் அணி நிர்வாகிகளை திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொண்டர் அணி தலைவராக பெத்துராஜ், துணைத்தலைவராக சரவணன், அமைப்பாளராக ரமேஷ், துணை அமைப்பாளர்களாக ராஜேஸ்வேல், கேசவன், அன்னராஜ், ராமர், முருகன், தூத்துக்குடி மாநகர தொண்டர் அணி தலைவராக சுரேஷ்குமார், துணைத்தலைவராக சுந்தர் என்ற மீனாட்சிசுந்தரம், அமைப்பாளராக அந்தோணிஜெயசங்கர், துணை அமைப்பாளர்களாக சங்கரநாராயணன், பாலமணிகண்டன், முத்துபாண்டி, ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில் தமிழக முதலமைச்சர் தளபதியார் ஆட்சியில் செய்த சாதனைகளையும் திட்டங்களையும் மாநில வளர்ச்சி பணிகளையும் அனைத்து தரப்பினர்கள் மத்தியிலும் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தொண்டர் அணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் அதிக உறுப்பினர்களை சேர்த்து மற்ற மாவட்டங்களை காட்டிலும் நமது மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ்வதற்கு ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று கொண்டார். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ரவீந்திரன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சின்னத்துரை, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், மற்றும் கருணா, மணி, அல்பட், உள்பட பலர் உடனிருந்தனர்.


