நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து ஆத்தூர் மாணவி சாதனை படைத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரை சேர்ந்தவர் லெட்சுமணன். ஆத்தூரில் பிரபல உணவகத்தில் கணக்கராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகள் திவ்யா திருச்செந்தூரில் உள்ள கோவிந்தம்மாள் கல்லூரியில் இளங்கலை கணிதம் முடித்தவர். இப்போது ஆதித்தனார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுகலை கணிதம் படித்து வருகிறார்.
இளங்கலை கணிதப் பாடப்பிரிவில் பல்கலைக் கழக அளவில் முதல் இடத்தை திவ்யா பெற்றுள்ளார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நாளை நடைபெற உள்ள 29வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் இவருக்கு தங்கப் பதக்கத்துடன் பட்டத்தையும் வழங்குவார். இத்தகவலை நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் மேலாத்தூர் எஸ் சுதாகர் சிவசுப்பிரமணியன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.


