தமிழகத்தில் 6 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் திங்கள் முதல் சனிக்கிழமை (ஜூலை 17-22) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஞாயிற்றுக்கிழமை காலை வரை ஏற்காடு (சேலம்), வால்பாறை (கோவை), பாா்வூட் (நீலகிரி) தலா 10 மி.மீ. மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகள், தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், மத்திய வங்கக் கடல் பகுதிகளில் திங்கள்கிழமை சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும்.
தெற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் பகுதிகள் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்லச் வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3 இடங்களில் வெயில் சதம்: ஞாயிற்றுக்கிழமை பதிவான வெப்ப அளவு (டிகிரி பாரன்ஹீட்) பாளையங்கோட்டை-101.84, பரமத்தி வேலூா்-101.3, மதுரை விமான நிலையம்-100.4.


