தூத்துக்குடி வெள்ளைபட்டியில் காமராஜர் 121வது பிறந்த நாளை முன்னிட்டு 121பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி வெள்ளைபட்டியில் பெருந்தலைவர் காமராஜர் 121வது பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் கீழ அரசரடி ஊராட்சித் தலைவர் ஜேசுதாசன் ஏற்பாட்டில் 121 பேருக்கு தையல் மிஷின், கிரைண்டர் வேஷ்டி, சேலை போன்ற நலதிட்ட உதவிகளை முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் INTUC மாநில பொதுச் செயலாளர் பெருமாள் சாமி கலந்து கொண்டு வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் அம்பிகாபதி, மாநில பொது பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா ,கலைப்பிரிவு பெத்துராஜ்,ஜெபமணி அந்தோணி ,இடி மின்னல் பாஸ்கர் ஆகியோர் கலந்து சிறப்புரையாற்றினர்


