தூத்துக்குடியில் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு தி கிரேட் காமராஜர் நற்பனி இயக்கம் சார்பில் ரத்ததானம் செய்யப்பட்டது.
தூத்துக்குடி அண்ணாநகரில் தி கிரேட் காமராஜர் நற்பனி இயக்கம் சார்பில் அவரது 121 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தி கிரேட் காமராஜர் நற்பணி இயக்க தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். செயல்தலைவர்கள் சசிக்குமார்,பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியருக்கு நோட்டுகள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. குழந்தைகளுக்கு இணிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. கமாமராஜர் 121வது பிறந்த நாளை முன்னிட்டு இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் 121 பேர் அரசு ரத்ததானம் செய்தனர். ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சமக பிரேம்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வக்கீல் செல்வக்குமார் தலைமையிலான நிர்வாகிகள் செய்திருந்தனர்


