தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்தநாள் இன்று, கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படுகிறது. காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகள் முழுவேலை நாளாக இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.காமராஜரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தவும், பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி , கட்டுரைப் போட்டி , கவிதைப் போட்டி போன்றவற்றை நடத்திடவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காமராஜரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடனிருந்தனர்.


