குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் இலவச திருமணம் நடந்தது.
இந்துசமய அறநிலையத்துறை சார்பில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதல்படி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த சுடலைமணி, ஒண்டிவீரன் நகரை சேர்ந்த முத்துமாரி ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.50ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள், திருமாங்கல்யம், பீரோ, கட்டில் ஆகியவை வழங்கப்பட்டது. இதில் கோவில் செயல் அலுவலர் ராம சுப்பிரமணியன்உட்பட பலர் கலந்து கொண்டனர்.


