தமிழகத்தில்
உற்பத்தியாகி தமிழகத்திலேயே கடலில் சங்கமிக்கும் ஒரே நதி தாமிரபரணி ஆகும்.இந்தநதி மூலம் நான்கு மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது சமீப காலமாக குளிக்கும் தரத்தில் உள்ள நீரை குடிக்கும் தரத்திற்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் பொதுமக்கள், ஆற்றங்கரை பகுதியில் உள்ள ஆலைகள், திருமண மண்டபம், சில அரசு துறைகளின் நடவடிக்கைகள் காரணமாக கழிவு நீர் கலந்து சென்னையில் உள்ள கூவம் நிலை தாமிரபரணி ஆற்றுக்கும் ஏற்படும் என தன்னார்வு அமைப்புக்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் சமீப காலமாக கழிவுநீர் அதிகம் கலப்பதால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி தாமிரபரணி குளிக்கும் தரத்தை இழந்து விடும் என்பதால் *மத்திய ,மாநில அரசுகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டியும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படவேண்டியும், மழை பொழிந்து நீர் நிரம்ப வேண்டியும்* நம் தாமிரபரணி மற்றும் நெல்லை சகஸ்ரநாம மண்டலி இணைந்து திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் ஆலய படித்துறையில் வைத்து சிறப்பு ஆராதனை,
பாராயணம் ,நாமாவளி,ஆரத்தி நடைபெற்றது சகஸ்ரநாம மண்டலி தலைவர் சிதம்பரம் & உறுப்பினர்களுடன் நம் தாமிரபரணி பொறுப்பாளர்
கள் நல்லபெருமாள், வித்யா சாகர், வக்கீல் கல்யாண ராமன், சிகாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். இறையருளால் வேண்டுதல் வைத்த உடனே மழை பொழிந்து, மழையில் நனைந்து கொண்டே பிராத்தனை நடை பெற்றது ஒவ்வொரு வாரமும் தாமிரபரணி பகுதி முழுவதும் அனைத்து படித்துறைகளிலும் நடத்தபடும் எனவும் தெரிவித்தனர்


