தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை தொடக்க விழா நேற்று நடந்தது.
விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஜெசி பெர்னாண்டோ தலைமை தாங்கி, பேரவை மாணவிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தோ்வான பல்வேறு துறைகள், மன்றங்கள், இயக்கங்களின் மாணவப் பிரதிநிதிகள், தங்களது பொறுப்புகளைச் சரிவரச் செய்வோம் என உறுதியளித்தனா். கல்லூரிச் செயலா் சி. சிபானா, துணை முதல்வா் குழந்தை தெரஸ், சுயநிதிப் பிரிவு இயக்குநா் ஜோஸ்பின் ஜெயராணி, மாணவிகள் பங்கேற்றனா். கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவா் பேரவைத் தலைவி ஜே. அட்லின் நன்றி கூறினாா்.


