தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பொன்னங்குறிச்சியில் திருநெல்வேலி திருச்செந்தூர் மெயின் ரோட்டில் இன்று திடீரென அடித்த காற்றில் சாலையேரம் நின்ற பனைமரம் முறிந்து விழுந்தது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த போலீசார் மற்றும் அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் உதவியுடன் பனைமரத்தினை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் சாலையில் விழுந்த பனைமரத்தை அகற்றிய பொதுமக்களை அப்பகுதி மக்கள் வாழ்த்தினர்.


