செய்துங்கநல்லூர் வெங்கடேஸ்வர மகாலில் வருகிற 2 ந்தேதி ஞாயிற்று கிழமை காலை 10 மணி முதல் 2 மணி வரை இலவச பொது மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது. முகாமிற்கு ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் தலைமை வகித்து துவக்கி வைக்கிறார். மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் மேலாளர் வேல்முருகன் முன்னிலை வகிக்கிறார். தனி அலுவலர் இராமசந்திரன் வரவேற்கிறார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் , கவுன்சிலர் சுந்தரி குமார், சமூக சேவகர் சுடலை முத்து, பகுதி பொறுப்பாளர் கண்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள். பகுதி பொறுப்பாளர் முருகசெல்வி நன்றி கூறுகிறார். இந்த முகாமில் இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் இலவசமாக பரிசோதனை செய்யப்படும் மருத்துவர் பரிந்துரையின் படி இசி.சி எடுக்கப்படும் , மகளிர் நல மருத்துவரின் ஆலோசனைகள் உண்டு. தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திடடம் , தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் வசதி உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருநெல்வேலி காவேரி மருத்துவமனையும் , கிராம உதயம் கிளை அலுவலகமும் செய்து வருகிறது.


