செய்துங்கநல்லூரில் உள்ள மிகவும் பழமையான தர்க்கா சந்தை பக்கீர் மஸ்தான் சாகீப் ஒலியுல்லா தர்க்கா. இந்த தர்க்காவில் கந்தூரி திருவிழா மிகச்சிறப்பாக நடந்தது. இதையட்டி வெள்ளிக்கிழமை மாலை தொழுகைக்க பிறகு கொடி உற்வலம ஆரம்பித்தது. தர்க்கா வளாகத்தில் இருந்து கிளம்பிய கொடி ஊர்வலம் முக்கிய தெருக்கள் வழியாக சென்று மீண்டும் தர்க்கா வந்து சேர்ந்தது. அதன் பின் அரண்மனை கொடி எற்றப்பட்டது. அதன் பின்பு விளக்கு ராத்திரி நடந்தது. தொடர்ந்து மறு நாள் காலை 8 மணிக்கு தப்ரூக் என்னும் நேர்ச்சை சாப்பாடு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பீமா தர்க்கா செயலாளர் கே.எஸ்.புகாரி, பக்கீர் மஸ்தன் தர்கா பொறுப்பாளர் பக்கீர் முனைதீன் தலைமையில் விழா குழுவினர் செய்து இருந்தனர்.



