தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக வந்த பாண்டிச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன், தாமிரபரணி
கரையோரங்களில் அதிக கோயில்களை உடைய பெருமை வாய்ந்த தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தி ஆளப்படுத்த தூர்வார வேண்டும் என தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தென் பகுதிக்கு வருகை தரும் போது எப்போதும் மகிழ்ச்சி தரும். தாமிரபரணியை பார்க்கும் போது வருத்தத்தை தருகிறது. தாமிரபரணி சுத்தப்படுத்தி ஆளப்படுத்த தூர் வாருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் தாமிரபரணிக்கு என நிறைய சிறப்புகள் உள்ளன அதிகமான கோயில்கள் கரையோரங்களில் உள்ளன. தாமிரபரணி சுத்தப்படுத்தி சரி செய்ய வேண்டும். தாமிரபரணி தண்ணீரை குடித்து வளர்ந்தவள் என்ற அடிப்படையில் நானும் அந்த கோரிக்கையை வைக்கிறேன். தாமிரபரணியை சுத்தப்படுத்த மாநில அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசிடமும் அது குறித்து கேட்கப்படும் என்றார் அவர்.
மேலும் முன்னதாக செய்தியாளர்கள் பேட்டி எடுப்பதற்காக காத்திருந்த போது நான் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களிலும் பேட்டி கொடுத்துள்ளேன் இருந்தாலும் ஸ்ரீவைகுண்டம் செய்தியாளர்களையும் ஏமாற்றாமல் பேட்டி கொடுப்பேன் என செய்தியாளர்கள் மத்தியில் கலகலப்பாக பேசினார்.


