செய்துங்கநல்லூரில் காவல்துறை பொதுமக்கள் இணைந்து போதை விழிப்புணர்வை வலியுறுத்தி மினி மரத்தான் போட்டி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து போதை விழிப்புணர்வு மற்றும் சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தி மினி மராத்தான் போட்டி இன்று நடந்தது.
இந்த போட்டி செய்துங்கநல்லூர் காவல் நிலையம் முன்பு தொடங்கி கருங்குளம் சத்திரத்தில் நிறைவடைந்தது. இந்த போட்டியை செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் பத்மநாபபிள்ளை தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த பார்வதிநாதன் முதல் பரிசும், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த முத்து இசக்கி இரண்டாம் பரிசும், கால்வாய் கிராமத்தை சேர்ந்த சங்கர் மூன்றாம் பரிசும், சந்தையடியூரைச் சேர்ந்த நிஷாந்த் நான்காம் பரிசு பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு காவல் ஆய்வாளர் பத்மநாபபிள்ளை பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.


