தூத்துக்குடி நகர போக்குவரத்து காவல் துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் தேதி உலக போதை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி நகர போக்குவரத்து காவல் துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் போக்குவரத்து காவல்துறையினர் கலந்து கொண்டனர்.


