உலக யோகா தினத்தை முன்னிட்டு சாத்தான்குளம் பி எஸ் கே ராஜரத்தினம் நினைவு கல்வியில் கல்லூரியில் வைத்து உலக யோகா தினம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து கல்லூரியின் முதல்வர் ஜெபசெல்வி தலைமை உரையாற்றி துவக்கி வைத்தார். சாத்தான்கள் அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் வைகுண்டரமணி கல்லூரி மாணவிகளிடையே விழா பேருரை ஆற்றினார். யோகாசனம் செய்வதினால் ஏற்படக்கூடிய நன்மைகள், எந்த நேரங்களில் யோகாசனம் செய்ய வேண்டும் எனவும் செய்முறைகள் குறித்து விளக்கமாக பேசினார். யோகா ஆசிரியைகள் ராஜலட்சுமி மற்றும் கமலம் ஆகியோர் செயல்முறை விளக்கம் அளித்தனர். கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கையேடுகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ், அருண் உட்பட ஏராளமான ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பால் ஆபிரகாம் நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தாளாளர் காந்திராஜன் மற்றும் சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.


