உலக யோகா தினத்தை முன்னிட்டு வல்லநாடு அருகே உள்ள கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த யோகா பயிற்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் தேரடி மணி தலைமை வகித்தார். கல்லூரி மாணவர் மன்ற ஆலோசகர் சீனிவாசன் சுப்பையா முன்னிலை வகித்தார். உலக சமுதாய சேவா சங்கம் திருநெல்வேலி மண்டலம் சார்பாக உலக யோகா தினத்தை முன்னிட்டு கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகளுக்கு பேராசிரியர் அரசு ஈஸ்வரன் யோகா பயிற்சி அளித்தார்.
அதில் யோகா செய்வதன் மூலம் உடலுக்குத் தேவையான என்னென்ன நன்மைகள் என்பது குறித்து மாணவ மாணவிகளுக்கு விளக்கினார். இந்த பயிற்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மூன்றாமாண்டு மாணவ மாணவிகள் பங்கேற்றனர். மேலும் சிறப்பாக யோகா செய்த மாணவ மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் தேரடி மணி சான்று மற்றும் பரிசுகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் விஜயலட்சுமி துனை பேராசிரியர்கள் பழனி, காயத்ரி அருள்நிதி.வீரப்பன்,ரமேஷ், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் கவிதா புஷ்பம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.


