சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரபர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை மாணவர்கள் சார்பில் யோகா பயிற்சி நடந்தது.
சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு என்சிசி யின் தரைப்படை பிரிவு அதிகாரி லெப்டினட் கர்னல் பிரதோஷ் உத்தரவுபடி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் உள்ள தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு இன்று காலை யோகா பயிற்சி நடந்தது.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு யோகா பயிற்சி நடந்தது.
பயிற்சியில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் கலந்து கொண்டார். யோகா மாஸ்டர் இசக்கிமுத்து மாணவர்களுக்கு யோகா கற்றுக் கொடுத்தார். யோகா மாணவர் சக்தி கணேஷ் மாணவர்களுக்கு யோகாசனங்களை செய்து காட்டினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் யோகாசனத்தை பற்றியும் யோகாவின் நன்மைகளைப் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியின் முடிவில் பள்ளியின் என்சிசி ஆசிரியர் மாணிக்கம் நன்றியுரை கூறினார்.


