நீர்வளத் துறை தாமிரபரணி கோட்டம் ஸ்ரீவைகுண்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஆட்சித் தலைவர் அவர்களுக்கு வல்லநாடு விவசாய சங்கத்தின் சார்பில் மருதூர் கீழக்கால் ஒன்பதாம் நம்பர் மடை ஓடையை காணவில்லை என்று 2017 இருந்து மனு அளித்தும் எந்த பலனும் இல்லாமல் உள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரடியாக பார்வையிட்டு தாசில்தார் தலைமையில்(05/05/2023) அன்று விவசாயிகளிடம் நேரடி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் விவசாயிகளிடம் ஒன்பதாம் நம்பர் மடை ஓடையை புதிதாக கட்டி தருவதில் எவ்வித மாற்றம் இல்லை என்று அதிகாரிகள் கூறினார்கள் அதன் பின் இதுவரை எந்த பதிலும் இல்லை ஆகையால் சமூகம் தயவு கூர்ந்து ஒன்பதாம் நம்பர் மடை ஓடையை கட்டி தருவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பரிந்துரை செய்யும்படி அன்புடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம் நன்றி
முகவரி சே.நங்கமுத்து செயலாளர் 5/59 இராசாங்குளம் விவசாய பராமரிப்பு சங்கம் வல்லநாடு


