நாசரேத்தில் ஆலன் திலக் கராத்தே பள்ளியின் சார்பாக கராத்தே பட்டைய தேர்வு போட்டி நடைபெற்றது.
ஆலன் திலக் தூத்துக்குடி மாவட்ட தலைமை கராத்தே மாஸ்டர் டென்னிசன் தலைமை தாங்கி மாணவர்களை தேர்வு செய்தார். சிறப்பு விருந்தினராக போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் எபநேசர் மற்றும் சிதம்பரம் மூர்த்தி கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை கூறிய கராத்தே பட்டயமும் சான்றிதழும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியை மாஸ்டர் காளிராஜ் மற்றும் எபினேசர் ஆகியோர் செய்திருந்தனர்.


