நாலுமாவடி காமராஜர் மழலையர் நர்சரி பள்ளி வகுப்பறைக் கட்டிடம் திறப்பு விழா வருகிற 14ஆம் தேதி மாலையில் சகோ மோகன் சி.லாசரஸ் திறந்து வைத்து ஆசி வழங்குகிறார் என பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர்அருகிலுள்ள நாலுமாவடியில் காமராஜர் மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் மூலம் காமராஜர் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி இந்த கல்வி ஆண்டு முதல் செயல்பட உள்ளது. இப்பள்ளிக்கு நாலுமாவடி புதுவாழ்வு சங்கத்தால் புதிய வகுப்பறைக் கட்டிடங்கள் கட்டப்பட்டு புதுப்பொலிவுடன் கட்டிட திறப்பு விழா நடைபெற உள்ளது. புதிய வகுப்பறைக் கட்டிடத்தை நாலுமாவடிஇயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ. மோகன் சி.லாசரஸ் வருகிற 14 ஆம் தேதி திறந்து வைத்து ஆசி வழங்குகிறார்.
திறப்பு விழாவினை முன்னிட்டு இந்த 2023 ஆம் ஆண்டு சேரும் மாணவ-மாணவியருக்கு சிறப்பு சலுகையாக சீருடை, பெல்ட், பேட்ஜ், பாடப் புத்தகங்கள், நோட்டுகள், புத்தகப் பை, எழுது பொருட்கள், குறிப்பேடுகள், ஷூ, சாக்ஸ் ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். வகுப்புகள் ஜூன் மாதம் வருகிற 14 ஆம் தேதி ஆரம்பமாகிறது. ஆகவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆங்கில வழியில் உயர் கல்வி வரை பயில்வதற்கு காமராஜர் நர்சரி மற்றும் துவக்கப்பள்ளியில் சேர்த்து பயன்பெறுமாறு பள்ளியின் தலைவர் அழகேசன், செயலாளர் நவநீதன் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.


