கருங்குளம் வடக்கு வாச் செல்வி அம்மன் கோயிலில் புதிய அறங்காவலராக சாந்தாதேவி பதவியேற்பு விழா நடந்தது. மாவட்ட அறங்காவலர் பார்த்தீபன்தெலைமை வகித்து அறங்காவலர் பதவிக்கான நியமன ஆணையை வழங்கினார். இதையட்டி வடக்கு வாச்செல்விஅம்மன் , அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் ஆராதனை நடந்தது. அதன் பின் சாந்தாதேவி பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் நம்பி, முத்தாலங்குறிச்சி சிவன் கோயில் அறங்காவலர் காமராசு, செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன், கீழப்புத்தனேரி பஞ்சாயத்து தலைவர் வசுந்தரா, வல்லகுளம் பஞ்சாயத்து கிளார்க் சோமு, ஆழ்வார்கற்குளம் பஞ்சாயத்து கிளார்க் முத்துராஜ், செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து கிளார்க் சங்கர பாண்டியன், சேது, முத்து உள்பட பலர் கலந்துகொண்டனர். பூஜை ஏற்பாடுகளை அய்யப்பன் செய்திருந்தார்.


