ஆதிச்சநல்லூரில் லக்னோ பழைய பீர்பால் ஆய்வு மையத்தின் ஆய்வாளர் மொர்த்தகாய் ஆய்வு செய்தார்.
ஒருகாலத்தில் தொல்லியல் ஆய்வு , கார்பன் டேட்டிங், வயது கண்டறிவது உள்பட பல்வேறு ஆய்வுக்கு வெளிநாடுகளுக்கு பொருள்களை அனுப்பி டேட்டிங் அறிந்து கொள்வார்கள். தற்போது நமது நாட்டிலேயே அதற்கான ஏற்பாடுகள் நடந்துள்ளது. குறிப்பாக தாமிரபரணி ஆற்றங்கரையில் நடந்த மத்திய மாநில அரசு ஆய்வுகளை மதுரை காமராஜர் பல்கலைகழகம், லக்னோ பழைய பீர்பால் ஆய்வு மையம் செய்து வருகிறது.
இதற்கிடையில் ஆதிச்சநல்லூரில் உள்ள உமிகளை கொண்டு வயதை கண்டிறியும் ஆய்வுகள் மற்றும் மகரந்த சேர்க்கை கொண்டு தாவரங்களின் இனம் கண்டறியும் ஆய்வை லக்னோ பழைய பீர்பால் ஆய்வு மையத்தினை சேர்ந்த ஆய்வாளர் மொர்த்தகாய் மற்றும் ஆய்வாளர்கள் செய்துவருகிறார்கள். ஆய்வாளர் மொர்த்தகாய் தற்போது ஆதிச்சநல்லூரில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அப்போது தொல்லியல் ஆய்வாளர் யதீஸ் குமார், மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைகழக பேராசிரியர் சுதாகர், அமெரிக்கா புளோரிடாவை சேர்ந்த காது மூக்கு தொண்டை மருத்துவர் டாக்டர் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.
சிவகளையில் கிடைத்த உமியை கொண்டு அமெரிக்கா பீட்டா ஆய்வகம் தாமிரபரணி கரை வயதை 3200 வருடம் பழமையானது என்று உறுதி செய்துள்ளது. தற்போது நடைபெறும் ஆய்வில் இதையும் தாண்டி இவ்விடம் பழமையானது என நிரூபிக்கப்படும் என ஆர்வலர்கள் எதிர்நோக்கியுள்ளனர். எனவே இதற்கான ஆய்வு முடிவு விரைவில் வெளி வர வேண்டும் என்ற ஆர்வத்துடன் உள்ளனர்.


