செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் திருச்செந்தூர்- பாலக்காடு ரயில் நின்று செல்ல மதுரை டி. ஆர். எம் அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் கடிதம் அனுப்பியுள்ளார்.
செய்துங்கநல்லூர் வளர்ந்து வரும் நகரமாகும். இங்கு உள்ள ரயில் நிலையத்தில் கிராஸிங் அமைப்பு உள்ளது. எனவே இரண்டு ரயில்கள் நின்று செல்லும் அளவுக்கு பெரிய ரயில் நிலையமாகும். இந்த ரயில் நிலையத்தினை சுற்றி மிக அதிகமான சுற்றுலா தலங்கள் உள்ளன. குறிப்பாக தென் திருப்பதி ( கருங்குளம்) தென் சீர்காழி( கொங்கராயகுறிச்சி) தென் தில்லை( செய்துங்கநல்லூர்), தென் திருவரங்கம்( செய்துங்கநல்லூர்), தென் திருநள்ளாறு ( நாணல்காடு) நவ கைலாயத்தில் நடு கைலாயம் தெட்சன காசி( முறப்பநாடு) நவலிங்கபுரத்தில் முதல் மூன்று தலங்களான வல்லநாடு, கொங்கராயகுறிச்சி, தெற்கு காரசேரி போன்ற ஊர்கள் இந்த ரயில் நிலையம் அருகில் உள்ளது. பாலிடெக்னிக் உள்பட 42 கிராம மக்கள் சந்திக்கும் இந்த ஊரில் அனைத்து ரயிலும் நின்று செல்கிறது. செந்தூர் எக்ஸ் பிரஸ் உள்பட பாஸஞ்சர் ரயில் களும் நின்று செல்கிறது.
இதற்கிடையில் இந்த வழியாக திருச்செந்தூர் பழனி வழியாக ஓடிய ஆன்மிக ரயிலில் செய்துங்கநல்லூர் முக்கிய தலமாக கருதப்பட்டு ரயில் நிறுத்தப்பட்டது. ஆனால கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட இரயில் திருச்செந்தூர் & பாலக்காடு ரயிலாக நீண்டிக்கப்பட்டு பயணத்தினை துவங்கியது. ஆனால் இந்த ரயில் செய்துங்கநல்லூரில் நிற்க வில்லை. இதனால் செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தலைமையில் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். முதல் கட்டமாக தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்த்தராஜ், கருங்குளம் சேர்மன் கோமதி ராஜேந்திரன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர். தொடர்ந்து தொடர் போராட்டத்தினை பொதுமக்கள் நடத்தினர். தபால் நிலையத்தினை முற்றுகையிடும் போராட்டம், ரயில்மறியல் போரட்டம் என அறிவித்தனர். இந்த போராட்ட குழுவினரை அப்போதைய டி.எஸ்.பி. வெங்கடேஷ் முன்னிலையில் மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி செந்தில்ராஜ் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த பேச்சு வார்த்தை முடிவில் இந்த பிரச்சனையை முறையாக ரயில்வே நிர்வாகத்துக்கு கொண்டு செல்வதாக மாவட்ட ஆட்சி தலைவர் வாக்களித்தார். இதனால் போராட்டம் கைவிடப் பட்டது.
அதன் பிடி மதுரை ரயில்வே டி.ஆர். எம்வுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் மரு.செந்தில்ராஜ் அவர்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் பாலக்காடு ரயில் செய்துங்கநல்லூரில் பாலக்காடு ரயில் நின்று செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக நன்றி தெரிவிக்கும் விதமாக மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி செந்தில்ராஜ் அவர்களை செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் முயற்சியால் செய்துங்கநல்லூர் அரசு நூலக கட்டிடம் புதிதாக கட்ட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


