குமரி கல்லூரியில் படிக்க சான்றிதழ் கொடுத்து படிக்க முடியாமல் போனதால் சான்றிதழை திரும்ப பெற முடியாமல் தவித்த மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஏற்பாட்டில் சான்றிதழை பெற்ற மாணவி மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தார்.
சாத்தான்குளம் அருகே உள்ள நவமுதலூரைச் சேர்ந்த பால்பாண்டி மகள் ரேணுகாஸ் . கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு குமரியில் உள்ள பார்மர்சி கல்லூரியில் பி.பார்ம் படிப்பு படிக்க கவுன்சிலிங்கில் இடம் கிடைத்து தனது முந்தைய சான்றிதழ்களை கல்லூரி கொடுத்திருந்தார். கல்லூரியில் கட்டணம் அதிகம் கேட்டதால் படிக்க முடியாமல் படிப்பை நிறுத்தினார். அதன்பின் மாணவி, தான் கொடுத்த சான்றிதழ்களை கல்லூரியில் கேட்டும், கல்லூரி நிர்வாகம் நிர்ணயித்த கல்வி கட்டணத்தை கட்டினால் மட்டுமே சான்றிதழை திரும்ப தருவதாக தெரிவித்து வந்துள்ளது.
இதனால் வேறு படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவி பலமுறை முயன்றும் கல்லூரி நிர்வாகம் வாங்கிய சான்றிதழை கொடுக்கவில்லை. இதனையடுத்து இந்த ஆண்டு மாணவி, சாஸ்தாவிநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் லூர்துமணி மூலம் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜிடம் முறையிட்டார். மாவட்ட ஆட்சியர், குமரி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்து சான்றிதழ் திரும்ப கிடைக்காமல் தவித்த மாணவிக்கு எந்த கட்டணமும் செலுத்தாமல் சான்றிதழ் கிடைக்க ஏற்பாடு செய்தார்.
இதனையடுத்து சான்றிதழை கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து பெற்ற மாணவி ரேணுகாஸ், புதன்கிழமை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது தொடர்ந்து ஜனர்லீசம் படிப்பு படிக்க போவதாக தெரிவித்ததையடுத்து, மாவட்ட ஆட்சியர், படிக்க தேவையான நிதி உதவிகளை ஏற்பாடு செய்து தருவதாக மாணவிக்கு உறுதி அளித்தார். அப்போது சாஸ்சாவிநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் லூர்துமணி உடனிருந்தார்.


