கால்கடுக்க நடந்து
கல்லிலும் முள்ளிலும்
தோள்கொடுக்க
ஆளின்றி
தேள் கொடுக்குக்
கொட்டியதாய்
தேயிலைத் தோட்டத்தில்
நாள் முழுக்க
வெயிலிலும் மழையிலும்
சுமந்த வேர்வைகளாய்
துயில இடமின்றிதுவண்ட
தொழிலாளர்களாய் – நாம்
இருக்கும் நேரத்தில்
அரிக் கொம்பரே
பருக்கும் உன்னுடல்
உறுதியால்
பொறுத்து இருக்க
பொறுமையாய்பழகிடு
எம்மைத் தேடிவந்த
இந்தக் காட்டில்
செம்மைப் பண்பும்
கனிவும் உள்ள
அன்பைக் கொடுக்கும்
மக்கள் உள்ளனரே
தீங்கு ஏதும் செய்யாமல்
திமிறின்றி நடக்காமல்
பாங்காய் பக்குவமாய்
இருந்திடு கொம்பா
எங்கும் அன்புநிறைந்த
இக்காட்டில் வாழ்ந்திடு
எங்களை வாழவிட்டு


