தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் இவரது மகன் காந்திராஜன் (24). இவர் பிளஸ் 1 படித்து வரும் பள்ளி மாணவியை காதலித்து வந்தாராம். இந்த நிலையில் அந்த மாணவியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். அவர்கள் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து காந்திராஜன் அந்த மாணவியை பைக்கில் கடத்தி சென்று விட்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், அவர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லையாம். இதுகுறித்து அந்த மாணவியின் தந்தை இன்று செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை, கடத்தல் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


